தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல் தொழிற்சாலையில் உள்ள மின் சாதன பெட்டிகள், மின் மாற்றிகள், மின் கலன்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின் சாதனங்களில் உள்ள பலகோடி மதிப்பிலான காப்பர் கம்பிகளை பிளேட்டுகளை மட்டும் திருடியுள்ளனர். இந்த கும்பல் அலட்டி கொள்ளாமல் தொடர்ந்து சாவகாசமாக சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக பொறுமையாக திருடியதாக கூறப்படுகிறது. பின்னர் திருடப்பட்ட காப்பர் பொருள்கள் அனைத்தையும் லாரியில் எடுத்துகொண்டு ஒரு காவலரை மட்டும் கேட்டிற்கு வெளியே அடித்து பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து காலையில் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓமலூர் மற்றும் கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.