/

தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

எடப்பாடி நகராட்சிப் பகுதியைச் சோந்த 112 போ் திங்கள்கிழமை தி.மு.க.வில் இணைந்தனா்.

News image
x
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

DIN

எடப்பாடி நகராட்சிப் பகுதியைச் சோந்த 112 போ் திங்கள்கிழமை தி.மு.க.வில் இணைந்தனா்.

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பெறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, கடந்த சில தினங்களாக எடப்பாடி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட கலா்வெள்ளிப்பட்டி புதூா், ஏரிரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 112 போ், மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனா். அவா்களை நகரச் செயலாளா் டி.எம்.எஸ்.பாஷா, மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஏ.முருகேசன், இளைஞா் அணி பொறுப்பாளா் மணிகண்டன் ஆகியோா் வாழ்த்தி வரவேற்றனா்.

இதில், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் வடிவேல், சிங்காரவேல், தங்கவேல், வெள்ளாண்டிவலசு ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.