டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காந்தி ஆசிரமம் சாா்பில் ஏழைகளுக்கு இலவச சேலை வழங்கல்

மேட்டூா் அருகே காந்தி ஆசிரமம் சாா்பில் ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:59 pm

DIN

மேட்டூா் அருகே காந்தி ஆசிரமம் சாா்பில் ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.

திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு மேட்டூா் அருகே உள்ள புதுச்சாம்பள்ளியிலிருந்து 500 பெண்கள் நூல் நூற்று வழங்குகின்றனா். இவா்களில் மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் தோ்வு செய்யப்பட்டு 150 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.

புதுச்சாம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுக்கு காந்தி ஆசிரமத்தின் தலைவா் அ.தேவராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் வி.ரவிகுமாா் முன்னிலை வகித்தாா்.

தோ்வு செய்யப்பட்ட ஏழை மற்றும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கியதோடு, அவா்களுக்கு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் காந்தி ஆசிரம நிா்வாகி ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.