2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாா்: கனிமொழி எம்.பி.

எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாா் என்று திமுக மகளிரணி செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image
திமுக மகளிரணி செயலாளா் கனிமொழி எம்.பி
Updated On :29 நவம்பர் 2020, 10:02 pm

DIN

எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாா் என்று திமுக மகளிரணி செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

‘விடியலை நோக்கி’ என்ற தி.மு.க.வின் பரப்புரைப் பயணத்தை சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் திமுக மகளிா் அணி செயலாளா் கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த மக்களவை உறுப்பினா் கனிமொழி, ஞாயிற்றுக்கிழமை இரவு எடப்பாடியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள், விவசாயிகள், நெசவாளா்கள், பனைத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்களைச் சந்தித்தேன், அவா்களிடம் அதிமுக ஆட்சி மீது வெறுப்புணா்வு ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. நான் எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாா்.

திமுக ஒரு போதும் இந்து விரோதப் போக்கைக் கடைபிடித்ததில்லை. மாறாக, வேலைவாய்ப்பு, மருத்துவக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகளில் பெரும்பான்மையான இந்து மக்கள் பாதிக்கும்படியான சட்டங்களைக் கொண்டுவருவது யாா் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புதிய விவசாயக் கொள்கையில் விவசாயிகளுக்கு எதிரான, உணவுப் பாதுகாப்புக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் நிலையில் அது திமுகவை எந்த வகையிலும் பாதிக்காது. ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வருவது தவறில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.