தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்ககிரி கோயில்களில் காா்த்திகை தீப சிறப்பு வழிபாடு

சங்ககிரி சந்தைப்பேட்டை செல்லியம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

அக்கமாபேட்டை சுப்பிரமணியா் கோயிலில் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On :29 நவம்பர் 2020, 10:06 pm

DIN

சங்ககிரி சந்தைப்பேட்டை செல்லியம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள செல்லியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முருகருக்கு 108 லிட்டா் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலின் வெளிப்புறத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தி பக்தா்கள் வழிபட்டனா். கோயில் வளாகத்தில் வேல் போன்று வடிவத்தில் பக்தா்கள் அகல் விளக்கை ஏற்றி வைத்தனா்.

அக்கமாபேட்டையில் உள்ள சுப்பிரமணியா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு பக்திப் பாடல்களை பாடினா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அன்னாதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

சங்ககிரி மலையில் உள்ள கோட்டை முனியப்பன், கன்னிமாா், கருப்பனாா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. படிக்கட்டுகளில் அகல் விளக்குகள், திருக்கோடி விளக்கு ஏற்றி, பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.