47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில் டெங்கு தடுப்புப் பணி, நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளில் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:10 pm

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில் டெங்கு தடுப்புப் பணி, நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளில் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

காக்காபாளையம் அருகே உள்ள கண்டா்குலமாணிக்கம் பகுதியில் டெங்கு தடுப்புப் பணி மற்றும் அங்குள்ள நியாயவிலைக் கடையில் பொருள்கள் வழங்கல் குறித்தும், காளிகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மற்றும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் அருள்ஜோதி அரசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் அருள், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், செல்வராஜ், உதவி இயக்குநா் (தணிக்கை) மணிவாசகம் , உதவி பொறியாளா் துரைசாமி, மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளா் சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.