தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சங்ககிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா

சங்ககிரி காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
சங்ககிரியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், லால்பகதூர்சாஸ்திரி ஆகியோர் உருவப்படங்களுக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
Updated On :2 அக்டோபர் 2020, 5:29 am

DIN

சங்ககிரி காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  அதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்தத்தி முன்னிலை வகித்தார்.

முன்னாள் மாநில பொது செயலர் கே.நடராஜன்,  முன்னாள் நகரத்தலைவர்கள் அண்ணாமலை,  காசிலிங்கம்,  நிர்வாகிகள் ரவி, அங்கமுத்து, காமராஜ், ஐன்டியூசி நிர்வாகி சின்னுசாமி, லோகநாதன், கருப்பண்ணன், குமார், பிரபு, சின்னதம்பி, வழக்குரைஞர் எஸ்.மணிசங்கர், ஆறுமுகம், கிரிசங்கர், சந்திரன், கந்தசாமி, விஸ்வநாதன், கார்த்தி  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

விழா முடிவில் காமராஜர் நினைவு தினம் அனுஷ்சரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.