தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தம்மம்பட்டி பேருந்துநிலையக் கடைகளுக்கு 5 மாத வாடகை விலக்கு அளிக்கப்படுமா?

தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு கடந்த 5 மாத காலத்திற்குரிய வாடகை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

News image
தம்மம்பட்டி பேருந்து நிலையம்.
Updated On :2 அக்டோபர் 2020, 7:15 am

DIN

தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு கடந்த 5 மாத காலத்திற்குரிய வாடகை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் தம்மம்பட்டி பேரூராட்சிக்குரியவை. இவைகளுக்குரிய வாடகைக் கட்டணங்கள் அனைத்தும், வருட துவக்கத்திலேயே, பேரூராட்சியில் முழுத்தொகையும் செலுத்திடவேண்டும். இந்நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பேருந்துநிலையக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டே காணப்பட்டன. 

சில கடைகள், சில மணி நேரங்கள் மட்டும்தான் திறந்திருந்தன. அதிலும் வாடகை செலுத்திடவேண்டிய அளவிற்குக்கூட விற்பனை நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்குரிய வாடகையை, கடைகாரர்கள் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது, பொதுமுடக்கத்தால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

அதனால் பயணிகள் பேருந்துநிலையத்திற்குள் வருவதில்லை. பயணிகள் வந்தால்தான் வியாபாரம் நடைபெறும். அதுபோல் நடைபெறவில்லை. எனவே, தமிழக அரசு அருள்கூர்ந்து, முழு பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த, ஐந்து மாத காலத்திற்குரிய வாடகை கட்டணங்களை செலுத்தத் தேவையில்லை எனவும், முன்னதாக செலுத்தியிருந்தால், அதனை அடுத்துவரும் அதாவது செப்டம்பரிலிருந்து வரவு வைத்துக்கொள்ளவும் உத்தரவிடவேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.