சங்ககிரி ராஜபாலி குளத்தில் கருவேலம் மரங்கள், களர் செடிகள் 2ஆவது வாரமாக அகற்றம்
சங்ககிரி ராஜபாலி குளத்தில் கருவேலம் மரங்கள், களர் செடிகளை அகற்றும் பணி 2ஆவது வாரமாக நடைபெற்றது.


சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட ராஜாபாவி என்கிற ராஜபாலி குளத்தில் மழை நீரை சேமிக்க பேரூராட்சி நிர்வாகம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் அக்குளத்தில் வளர்ந்துள்ள கருவேலம்மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள பழமை வாயந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்காவும், எல்லை அம்மன் கோயிலுக்கு வடக்கே ராஜாபாவி குளம் உள்ளன. அக்காலத்தில் இதனருகே அரண்மனை ஒன்று இருந்ததுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்குளத்தில் ராஜாக்கள் அக்காலத்தில் நீராடியதால் ராஜாபாவி என்ற பெயர் பெற்றுள்ளது நாளடைவில் இப்பெயர் மருவி ராஜபாலி என்று மக்கள் அழைக்கின்றனர். இக்குளம் 41060 சதுரடி பரப்பளவை கொண்டுள்ளது.
சங்ககிரி மலையில் உள்ள அனைத்து குளங்கள், பாலிகள் நிரம்பி மழை நீரும், ஊற்று நீரும் வடிகால் வழியாக மலையடிவாரத்திலிருந்து பொந்து கிணறு வழியாக இக்குளத்திற்கு தண்ணீர் அக்காலத்தில் வந்து கொண்டிருந்துள்ளன. நாளடைவில் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டு இதற்கு வரும் தண்ணீர் அனைத்தும் வீணாக சாக்கடையில் செல்கின்றன. இக்குளத்தினை சுற்றிலும் சுற்றுச்சுவர்கள் சிதலமடைந்தும், கருவேலம் மரங்கள், களர்செடிகளும் வளர்ந்து வருகின்றன.

இதனையடுத்து சங்ககிரியில் தற்போது பெய்து வரும் மழை நீரை சேமிக்க எண்ணிய பேரூராட்சி நிர்வாகம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் , சங்ககிரி அரிமா சங்கம், சங்ககிரி, கோட்டை அரிமா சங்கம் அமைப்புகள் ஒன்றிணைந்து கருவேலம் மரங்கள், களர்செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். குளத்தின் பரப்பளவு அதிகமாக உள்ளதையடுத்து ஒவ்வொரு செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி முழுமையாக அகற்றும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கருவேலம் மரங்கள், களர்செடிகள் அகற்றும் வரை இப்பணிகளில் ஈடுபட போவதாக டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பழைமை வாயந்த நீர் தேக்கமான குளத்தில் உள்ள கருவேலம் மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளர் பல்வேறு பொது நல அமைப்புகளின் தன்னார்வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...