தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டம்

நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
நங்கவள்ளி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :5 அக்டோபர் 2020, 7:26 am

DIN

நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ளது நங்கவள்ளி, வனவாசி அரசு மருத்துவமனைகள். தமிழக முதல்வரின் தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் இந்த மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டும் அவர்கள் பணிக்கு வருவதில்லை. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியம் காரணமாக பிறககும் சிசுக்கள் இறந்து போவதுடன் கற்பினிகளும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். 

இதனை கண்டித்து இன்று பகல் 11 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பழ.ஜீவானந்தம் தலைமையில் திடீரென நங்கவள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. கோரிக்கை மணுவை மருத்துவ அலுவலரிடம் பழ.ஜீவானந்தம் வழங்கினார். 

போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் மீண்டும் மருத்துவர்கள் அலட்சியமகா நடந்துகொண்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.