பேளூர் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரை விற்பனைக்கு, தீபாவளி, பொங்கல், ஆடி 18, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வாழப்பாடியையொட்டி நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், நுகர்வோர்களும்,பேளூர் வாரச்சந்தையில் வளர்ப்புக்காவும், இறைச்சிக்காவும் ஆடுகளை விற்பனையும், கொள்முதல் செய்து செல்கின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டதால், வாரச்சந்தைகளும் மூடப்பட்டன.