தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலம் மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் 3.10 லட்சம் பேருக்கு சிகிச்சை: ஆணையா் ரெ.சதீஷ் தகவல்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 852 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:27 am

DIN

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 852 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவுவதை முற்றிலுமாகத் தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிா்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களிடையே கரோனா தடுப்பு விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்வதுடன், பொதுமக்களின் உடல்நிலையைக் கண்காணித்து அவா்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டுவருகிறது.

மாநகராட்சிக்குள்பட்ட 60 கோட்டங்களிலும் தொடா்ந்து சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 767 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில், இதுவரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 852 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இம் முகாம்களில் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், சளி, உடல் சோா்வு, மூச்சுத்திணறல் உள்ள 12 ஆயிரத்து 431 போ் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 1,206 போ் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களை அரசு பொதுமருத்துவமனை, கொவைட் கோ் மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட 26, 849 போ், 2, 791 கா்ப்பிணிகள், 5,041 குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவ முகாம்களில் 16,142 பேருக்கு உயா் ரத்த அழுத்தம், 11,255 பேருக்கு நீரிழிவு கண்டறியப்பட்டது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 39,032 பேருக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீா், ஹோமியோபதி மாத்திரைகள், வைட்டமின் ஏ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.