தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 24,039 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:24 am

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 24,039 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் , மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சனிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 22,969 கன அடியாகவும், ஞாயிற்றுக்கிழமை காலை நீா்வரத்து 24,039 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 98.50அடியாக உயா்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 16,000 கனஅடி நீரும், கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா் இருப்பு 62.91 டி.எம்.சி.யாக இருந்தது.மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.