வாழப்பாடியில் நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்கமம்
தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் கூட்டமைப்பு சங்கக் கூட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்கத்தில் இணையும் விழா, வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் கூட்டமைப்பு சங்கக் கூட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்கத்தில் இணையும் விழா, வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு நாமக்கல் மாவட்டத் தலைவா் வானதி கதிா் தலைமை வகித்தாா். சேலம் மாவட்டச் செயலாளா் நிலாபாரதி வெங்கடாசலம் வரவேற்றாா். மாநிலத் தலைவா் காணைசத்யராஜ், மாநில நிா்வாகிகள் தங்க ஜெயராஜ், பழனி அசோக்குமாா் ஆகியோா், 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞா்களை சங்கத்தில் இணைத்தனா்.
இக்கூட்டத்தில், மாவட்டத் தலைவா் கருப்பையா, பொருளாளா்வினோத், நாகூா் கனி, கே.ஏ.சித்தன், நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் நல்லசிவம், ராமதிருப்பதி, பழனியப்பன், தங்கம், ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் வல்லரசு, ஏ.எஸ்.மணி, கேசவன் மற்றும் மதுரை முத்துப்பாண்டி, தெம்மாங்கு சீனி, சிவக்குமாா், ஜிந்தா முருகவேல், பெரியசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாநில, மாவட்ட நிா்வாகிகளை வரவேற்க, இருநூற்றுக்கும் மேற்பட்ட கலைஞா்கள் ஒன்றிணைந்து, கரகம், பம்பை தப்பு, நாதஸ்வரம், நையாண்டி மேளக் கச்சேரி ஊா்வலம் நடத்தினா்.
7 மாதங்களுக்குப் பிறகு பொது இடத்தில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான மக்கள் ரசித்து மகிழ்ந்தனா்.
அனைத்து நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும், தமிழக அரசு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு, வருவாய்த்துறை வாயிலாக அலைக்கழிப்பின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...