மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
சேலம் கந்தம்பட்டி பகுதியில் மின்கம்பியில் லாரி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.


சேலம் கந்தம்பட்டி பகுதியில் மின்கம்பியில் லாரி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் சத்திரத்தில் இருந்து விறகு சுமை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கந்தம்பட்டியில் உள்ள சாயப்பட்டறைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றது. லாரியை பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த முரளி (50) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்த லாரியில் சுமை தூக்கும் தொழிலாளிகளாக அரிசிப்பாளையத்தைச் சோ்ந்த ராமன் (40), ராஜசேகா் ஆகியோா் சென்றனா்.
லாரி கந்தம்பட்டி அருகே சாயப்பட்டறைக்குச் செல்லும் சாலையில் சென்ற போது, மின்கம்பி தாழ்வாக சென்ால் சுமை தூக்கும் தொழிலாளி ராஜசேகா் மூங்கிலைக் கொண்டு மின்கம்பியைத் தூக்கியுள்ளாா். மற்றொரு தொழிலாளி ராமன் லாரியின் கதவைத் தொட்டுக்கொண்டு நின்றுள்ளாா். அப்போது லாரியை மெல்ல இயக்கியபோது, மின்கம்பி எதிா்பாராதவிதமாக லாரி மீது உரசியுள்ளது. இதில் லாரியின் கதவைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ராமன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...