சங்ககிரி: ஈஸ்வரன் கோயில்களில் சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜைகள்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி சோமேஸ்வரர்சுவாமிக்கு சனிக்கிழமை மாலை அன்னாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றன. 
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் சுவாமிக்கு ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி சனிக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த அன்னாபிஷேகம்

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி  சோமேஸ்வரர் சுவாமிக்கு சனிக்கிழமை  மாலை அன்னாபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கோயில் அர்ச்சகர் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த சாதத்தை எடுத்து கோயில் அருகில் உள்ள குளத்தில் விட்டார். பின்னர் சுவாமிக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதில் அதிகமான பக்தர்கள் சுவாமியை வணங்கிச் சென்றனர்.  

பூத்தாழீஸ்வரருக்கு சிறப்பு பூஜை 

சங்ககிரி அருகே உள்ள அன்னதானப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனையடுத்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com