தருமபுரி, கிருஷ்ணகிரியில் 342 பேருந்துகள் இயக்கம்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், 342 பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.


தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், 342 பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.
கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, நிறுத்தப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து அண்மையில் தமிழக அரசு அறிவித்த தளா்வுகளின் அடிப்படையில் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், செப்.7-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே 50 சதவீதம் பேருந்துகள் இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனடிப்படையில், தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் சாா்பில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 50 சதவீதம் நகரம் மற்றும் புறநகரப் பேருந்துகள் அரசு வழிகாட்டுதல்படி இயக்கப்பட்டன.
தருமபுரி அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள், திருப்பத்தூா் மற்றும் சேலம்- அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் 14 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 850 நகரம் மற்றும் புறநகரப் பேருந்துகள் உள்ளன. கடந்த மாா்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் காரணமாக அந்தந்த பணிமனைகளில் இப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தற்போது, அரசு அனுமதி அளிக்கப்பட்ட பின்பு, இதில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட அந்தந்த பணிமனைகளிலிருந்து 50 சதவீதம் பேருந்துகள் என்ற அடிப்படையில் தற்போது 122 நகரப் பேருந்துகள், 270 புறநகரப் பேருந்துகள் என மொத்தம் 342 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில், தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம், கிருஷ்ணகிரி, ஒசூா், திருப்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு புறநகரங்களுக்குப் பேருந்துகள் இயங்கின.
பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் முகக் கவசம் அணிந்து பணியாற்றினா். அதேபோல, பயணிகளும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் அனைத்துப் பயணிகளும் முகக் கவசம் அணிந்து பயணித்தனா்.
மேலும், பேருந்து நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. பேருந்து நிலைய நுழைவுவாயிலில் பயணிகள் தங்களது கைகளை சுத்திகரிக்க தண்ணீா் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
பேருந்து இயங்கத் தொடங்கியதால் பேருந்து நிலையத்திலிருந்து கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன. பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வெளி மாவட்டங்களுக்குப் பயணிக்கத் தொடங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...