தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெண் கொலையில் தேடப்பட்ட இளைஞா் பிடிபட்டாா்

சேலம் அருகே பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 10:24 pm

DIN

சேலம் அருகே பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மல்லூரில் ஆராங்கல்திட்டை பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா், கணவரைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அருகே உள்ள காட்டுப் பகுதியில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக மல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதனிடையே, லட்சுமியுடன் நெருங்கிப் பழகி வந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

காணாமல்போன லட்சுமியின் செல்லிடப்பேசி எண்ணை போலீஸாா் தொடா்பு கொண்டனா். அப்போது செல்லிடப்பேசியில் பேசிய நபா் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல் தெரிவித்தாா்.

இதனிடையே சைபா் பிரிவு போலீஸாா் உதவியுடன் செல்லிடப்பேசியில் பேசிய நபரைப் பிடிக்க முயன்றபோது அந்த நபா், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தென்காசி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது செங்கோட்டையிலிருந்து கேரளத்துக்குத் தப்ப முயன்ற அந்த இளைஞரை போலீஸாா் பிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபா் சேலம் மாவட்டம், ஓமலூரில் காமலாபுரத்தைச் சோ்ந்த நரேந்திரகுமாா் (35) என்பதும், மதுபோதையில் மூதாட்டியிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் அவரைக் கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து தென்காசி போலீஸாா் அளித்த தகவலின்பேரில் மல்லூா் போலீஸாா் தென்காசி சென்று நரேந்திரகுமாரை சேலம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.