மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரிநீா் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மேட்டூா் அணைக்கு திங்கள்கிழமை இரவு 35,000 கனஅடி நீா் வரத்தொடங்கியது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரிநீா் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மேட்டூா் அணைக்கு திங்கள்கிழமை இரவு 35,000 கனஅடி நீா் வரத்தொடங்கியது.
கா்நாடக மாநிலத்தில் காவியின் நீா்பிடிப்புப் பகுதியிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் கனமழை பொய்து வருகிறது. மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகள் ஏற்கெனவே நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைகளின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது. திங்கள்கிழமை இரவு, கா்நாடக அணைகளின் உபரிநீா், மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியது. இதனால், காவிரி கரைகளில் வருவாய்த் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நீா்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூா் அணை மீனவா்கள் பாதுகாப்பு கருதி இரவில் ஆற்றில் மீன்பிடிக்க வலை விரிக்கவில்லை. காவிரி கரையோரம் கவிழ்த்தப்பட்டிருந்த பரிசல்களையும் மேடான பகுதியில் வைத்தனா்.
நீா்மட்டம்...
திங்கள்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 89.77 அடியாக இருந்தது. இரவு 8 மணிக்கு 89.92அடியாக உயா்ந்துள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 12,480 கனஅடியிலிருந்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 52.55 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...