கந்துவட்டி கொடுமை: விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தனது குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகம் அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தனது குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகம் அருகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், பனமரத்துப்பட்டி அருகே திப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (40). விவசாயியான இவா், மனைவி மைதிலி, மகன் அப்பு ஆகியோருடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தாா்.
பின்னா், திடீரென ஆட்சியா் அலுவலக நுழைவாயில் அருகே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
சுந்தரம் திப்பம்பட்டியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 16 லட்சம் கடனாக வாங்கியிருந்ததும், கடன்தொகை மற்றும் வட்டியுடன் சோ்த்து திருப்பி ரூ. 18 லட்சம் வரை செலுத்தியுள்ளாா். இதனிடையே கடன் அளித்தவா், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா். இத்துடன் வீட்டையும், விவசாய நிலத்தையும் தனது பெயருக்கு மாற்றி தரும்படி மிரட்டி உள்ளாா். இதனால், மன வேதனை அடைந்த நிலையில் சுந்தரம் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...