தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஓமலூர் அருகே தார்ச்சாலை அமைக்கும் பணி: அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் தொடங்கி வைத்தார்

ஓமலூர் அருகே ரூ.3 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.

News image
தார்ச்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைக்கிறார் அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல்.
Updated On :24 செப்டம்பர் 2020, 8:05 am

DIN

ஓமலூர் அருகே ரூ.3 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள திண்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினை ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கி வத்தார். இதில் ரூ. 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பனங்காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 2.5கிலோமீட்டர் தொலைவில் தார்ச்சாலை மற்றும் சீரங்கன்வளவு உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் தொடங்கிவைத்தார். 

முன்னதாக பணியைத் தொடங்கி வைக்க வந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு மேளதாளத்துடன் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இறுதியாக அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை புதியதாக சீரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சட்டப்பேரவை உறுப்பினருக்கும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மணி, ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.