சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் மூலிகை சிகரெட்

ஆத்தூரைச் சேர்ந்த பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் தயாரித்துள்ள மூலிகை சிகரெட், இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் மூலிகை சிகரெட்

ஆத்தூரைச் சேர்ந்த பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் தயாரித்துள்ள மூலிகை சிகரெட், இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46). திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறை உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமுதாசாந்தி, ஆத்தூர் அடுத்த வீரகனூரில் அரசு சித்த மருத்துவ மருத்துவராக பணியாற்றி வருகிறார். விஜயகுமார் தனது மனைவி அமுதசாந்தி உதவியுடன், கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு, நுரையீரல் சளியை விரட்டிட ஆவி பிடித்தல் சிகிச்சை அளிப்பதற்கு, வீட்டு உபயோகப் பொருளான குக்கரை பயன்படுத்தி, ஒரே நேரத்தில் 7 நபர்கள் வரை,  இஞ்சி, மஞ்சள், மிளகு, உப்பு, வெற்றிலை ஆகிய எளிதாக கிடைக்கும் மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து,  சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் ஒப்படைத்தார். 

இதற்கு பல்வேறு தரப்பினரிடையேயும்  பாராட்டு குவிந்தது. சேலம், வாழப்பாடி,  நாமக்கல், அரசு மருத்துவமனைகளில் இந்த நீராவி இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கபசுர குடிநீரில் பயன்படுத்தப்படும் மூலிகைகளோடு வெற்றிலை, இஞ்சி உள்ளிட்ட வீட்டு உபயோகத்தில் அன்றாடம் பயன்படுத்தப்படும் எளிய மூலிகைகளை பொடியாக அரைத்து சிகரெட்டாக தயாரித்து பயன்படுத்துவது குறித்து சோதனை முயற்சியில் விஜயகுமார் ஈடுபட்டுள்ளார். பொதுவாக புகையிலை சிகரெட் புகைப்பிடிப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும். ஆனால் இந்த மூலிகை சிகரெட் புகை பிடித்தால் நுரையீரலிலுள்ள சளி குறைந்து,  நன்மை ஏற்படுமென தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கருணா நோய் தொற்றால் நுரையீரல் சளி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நுரையீரல் சளியை கட்டுப்படுத்தும் இந்த மூலிகை சிகரெட் குறித்த தகவல் முகநூல், கட்செவி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: கபசுரக் குடிநீரிலுள்ள மூலிகைகள் மற்றும் வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மூலிகைகளை அரைத்து பொடி செய்து, சிகரெட்டைப் போல தயார் செய்து உபயோகப்படுத்த புது முயற்சி செய்துள்ளேன். இது உடலுக்கு நன்மை பயக்குமென கருதுகிறேன். புகையிலை சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த மூலிகை சிகரெட்டை பயன்படுத்தினால், புகையிலை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட லாம். 

இந்த சிகரெட், நுரையீரல் சளியை குறைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். இது குறித்து சித்த மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து, இதிலுள்ள நன்மையை கண்டறிந்து, மக்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com