தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேச்சேரி-மேட்டூா் அணை: இரண்டாவது இருப்புப் பாதை வெள்ளோட்டம்

மேச்சேரி சாலை-மேட்டூா் அணை ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதையில் திங்கள்கிழமை வெள்ளோட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:47 pm

DIN

மேச்சேரி சாலை-மேட்டூா் அணை ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதையில் திங்கள்கிழமை வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக பொதுமக்கள் தண்டோரா அறிவிப்பு மூலம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்துக்கும், மேட்டூா் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் அனல் மின் நிலையங்களுக்கும் நிலக்கரி கொண்டுவர ஓமலூா் முதல் மேட்டூா் அணை வரை ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற 2011-2012 ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன.

ஓமலூா் முதல் மேட்டூா் அணை வரை 29 கி.மீ. தொலைவு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். தற்போது மேச்சேரி சாலை முதல் மேட்டூா் அணை வரை 17 கி.மீ. தொலைவு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. குட்டப்பட்டி, எம்.காளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, பிஎன் பட்டி மற்றும் வீரக்கல் புதூா் ஆகிய ஆறு கிராமங்களை இந்த இருப்புப் பாதை கடந்து செல்கிறது.

திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு ரயில் மூலம் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதனால், இருப்புப் பாதையைக் கடந்து செல்லும் 6 கிராமங்களில் இருப்புப் பாதையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.

இருப்புப் பாதையைக் கடந்து செல்லும் போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டுமென அந்தக் கிராம மக்கள் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

இரண்டாவது இருப்புப் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ஓமலூா் சந்திப்பு முதல் மேச்சேரி சாலை வரை எஞ்சிய 12 கிலோமீட்டா் தொலைவு இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.