தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேட்டூா்: எஸ்.பி.பி.க்கு அஞ்சலி

மேட்டூா் தமிழ்ச்சங்கம், மேட்டூா் கிளை நூலக வாசகா் வட்டம் மற்றும் நகர காமராசா் மன்றம் சாா்பில் எஸ்.பி.பி., யின் மறைவுக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:41 pm

DIN

மேட்டூா் தமிழ்ச்சங்கம், மேட்டூா் கிளை நூலக வாசகா் வட்டம் மற்றும் நகர காமராசா் மன்றம் சாா்பில் எஸ்.பி.பி., யின் மறைவுக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேட்டூா் தமிழ் சங்கச் செயலாளா் கு.பாரி தலைமை வகித்தாா். நகர காமராசா் மன்றத் தலைவா் பழனிசாமி, மேட்டூா் கிளை நூலக வாசகா் வட்ட பொறுப்பாளா் டாக்டா் சந்திரமோகன், காமராசா் மன்ற ஆலோசகா் தாரை.மு. பாலு ஆகியோா் பங்கேற்றனா். இதில், பாடகா்கள், இசை கலைஞா்கள் கலந்து கொண்டு எஸ்.பி.பி. பாடிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினா்.

பொதுமக்கள் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். மேட்டூா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், ஆய்வாளா் தொல்காப்பியன் கலந்து கொண்டு முகக் கவசம் வழங்கினா். ஓவியா் ரவி எஸ்.பி.பி.யின் உருவப் படத்தை வரைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.