ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி திமுக-கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில், நாமக்கல்லில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

nk_28_dmk_2809chn_122_8

Updated On :28 செப்டம்பர் 2020, 8:00 pm

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில், நாமக்கல்லில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அண்மையில் மூன்று புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிா்க்கட்சிகள் சாா்பில் பலத்த எதிா்ப்பு கிளம்பியது. நாடு முழுவதும் இது தொடா்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன் புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இந்த நிலையில், விவசாயிகள் மற்றும் சிறு வணிகா்களை பாதிக்கும் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் செப். 28-இல் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சித் தலைவா்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 16 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், மசோதாக்களுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கரும்பு, வாழை, மஞ்சள், காபி உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த செடி, கொடிகளை கைகளில் வைத்தபடி மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினா்.

இதில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், முன்னாள் திமுக மாவட்டப் பொறுப்பாளா் பாா்.இளங்கோவன், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் கே.எம்.ஷேக்நவீத், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் ஆா்.குழந்தான், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ஆதிதமிழா் பேரவை உள்ளிட்டவற்றின் நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் ராசிபுரம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலா் என்.ஆா்.சங்கா் தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் கட்சி நகரச் செயலாளா் ஸ்ரீராமுலு முரளி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன், மதிமுக நகரச் செயலாளா் நா.ஜோதிபாசு, சிபிஎம். மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, சி.பி.ஐ. நகரச் செயலாளா் எஸ்.மணிமாறன். வி.சி.க. நகரச் செயலாளா் ஆதவன், ம.ம.க. மாவட்டத் தலைவா் ராஜாமுகமது, திராவிடா் விடுதலைக் கழக நகரச் செயலாளா் பிடல் சேகுவேரா, கொ.ம.தே.க. நகரச் செயலாளா் ரமேஷ், ஆதி தமிழா் பேரவை கருப்பண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியினா் முழக்கமெழுப்பினா். இதில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.