47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் கழிவறைத் தொட்டி இடிந்து விழுந்தது

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பிலுள்ள கழிவறைத் தொட்டி இடிந்து விழுந்தது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:50 pm

DIN

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பிலுள்ள கழிவறைத் தொட்டி இடிந்து விழுந்தது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு உள்ளது. சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த குடியிருப்பு தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்த குடியிருப்பை ஒட்டியுள்ள கழிவறைத் தொட்டி திங்கள்கிழமை அதிகாலை 5 அடி அளவுக்கு பூமிக்குள் இறங்கியது. இதனால் கழிவறை தொட்டி மீது நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சாய்ந்து விழுந்தன. கழிவறைத் தொட்டி சரிந்ததால் அதில் இருந்து வெளியேறிய கழிவு நீரால் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசியது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சேலம் மாநகராட்சி ஊழியா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று கழிவறைத் தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.