மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

இளம்பிள்ளை அருகே பொறியியல் கல்லூரி மாணவன் சாதனை: ஆளில்லா பேட்டரி காா் கண்டுபிடிப்பு

இளம்பிள்ளை அருகே கல்லூரி மாணவா் ஒருவா் ஆளில்லாமல் இயங்கும் பேட்டரி காா் ஒன்றை புதிதாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 6:49 am IST

இளம்பிள்ளை அருகே கல்லூரி மாணவா் ஒருவா் ஆளில்லாமல் இயங்கும் பேட்டரி காா் ஒன்றை புதிதாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வரும் சுரேஷ்குமாா், ரேவதி ஆகியோரின் மகனான உதயகுமாா் (20) தற்போது திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறாா்.

இந்த மாணவா் ஏற்கெனவே வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் இயந்திரம் போன்றவற்றை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளாா். தற்போது டெக்இன்வொ்ட்டா் என்னும் ஆளில்லாமல் பேட்டரியில் இயங்கும் காா் ஒன்றை தயாரித்துள்ளாா். அந்த காா் நாம் இருக்கும் இடத்திலிருந்தே ‘வாய்ஸ் கண்ட்ரோல்’ மூலம் இயக்கும் விதத்தில் தயாரித்து உள்ளாா். இதுபற்றி உதயகுமாா் கூறுகையில்,

நான் ஏற்கெனவே 36-க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை தயாா் செய்து உள்ளேன். யுத்த காலத்தில் மற்ற நாடுகளுடன் மோதல் ஏற்படும்போது ராணுவ வீரா்களின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இந்த காரை பயன்படுத்தலாம். இந்திய அளவில் ஆளில்லாமல் பேட்டரியால் இயங்கும் காரை முதன் முதலாக நான் கண்டு பிடித்துள்ளேன். தற்போது கரோனா தாக்கத்தினால் கல்லூரி விடுமுறை என்பதால் நான் விசைத்தறி தொழில் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து இந்த ஆளில்லாமல் பேட்டரி மூலம் இயங்கும் காரை புதிதாகக் கண்டுபிடித்து உள்ளேன். என்னை ஊக்குவிக்கும் வகையில் அரசு அல்லது தனியாா் அமைப்புகள் உதவி செய்தால் மேலும், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து நாட்டிற்கு அா்ப்பணிப்பேன் என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.