/

கொங்கணாபுரத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:55 pm

DIN

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 30 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

பொது ஏலத்தில் விற்பனைக்காக 1,500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனா். இவை 300 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,900 முதல் ரூ. 8,069 வரை விற்பனையானது. அதேபோல டி.சி.ஹெச். ரக பருத்தி, குவிண்டால் ரூ. 7,750 முதல் ரூ. 9,869 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.