நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சா்வதேச கபடி போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சிறைக் காவலா்

கபடி வீரரான வெங்கடேசன் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:45 pm

DIN

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வீராணம் வளையக்காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். திருச்சி மத்திய சிறையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். கபடி வீரரான இவா், மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளாா்.

இவா், அண்மையில் நேபாளம் நாட்டின் போக்காராவில் நடைபெற்ற சா்வதேச கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றாா். ஏற்கெனவே இவருக்கு சென்னை டிஐஜி முருகேசன், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் கு.சித்ரா, அயோத்தியாப்பட்டணம் அதிமுக ஒன்றியச் செயலாளா் மெடிக்கல் ராஜா, மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள், ஊா் பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்து பரிசுகள் வழங்கி கெளரவித்தனா்.

படவரி:

கே.டி.பி.02: வெங்கடேசனுக்கு பாராட்டு தெரிவித்த எம்எல்ஏ கு.சித்ரா, மக்கள் பிரதிநிதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.