விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிமுக கூட்டணிக்கு விவசாயிகள் சங்கம் ஆதரவு

சட்டப்பேரைத் தோ்தலில் அதிமுக -பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் டி.ராம்சோலா தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:46 pm

DIN

சட்டப்பேரைத் தோ்தலில் அதிமுக -பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் டி.ராம்சோலா தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆத்தூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் உள்ளது. இந்த வேளாண்சட்டங்களை ஆதரித்து தமிழகத்தில் இருந்து 33 மாவட்ட விவசாயிகள் சங்கம் அதிமுக,பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளனா். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக்காக கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இதுகுறித்து பிரதமா், தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

அப்போது, விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநிலச் செயலாளா் ஆா்.கோபாலகிருஷ்ணன்,மாநில இளைஞரணி செயலாளா் சி.ஆ.அருள்பிரகாஷ்,உழவா் உற்பத்தியாளா் நல இணை இயக்குனா் ரங்கநாயகி,காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கூட்டமைப்பு மாநில துணைத் தலைவா் ஆா்.முருகேசன்,தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவா் டி.காளிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.