சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பழஞ்சூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூா் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூா் கிராமத்தில் புதன்கிழமை புதிய நியாயவிலைக் கடையை திறந்துவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கா.அண்ணாதுரை. உடன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பழஞ்சூா் செல்வம் உள்ளிட்டோா்.

Updated On :11 மார்ச் 2026, 6:51 pm

பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூா் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ரு. 16 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடைக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணா துரை தலைமை வகித்து புதிய நியாயவிலைக் கட்டடத்தை திறந்துவைத்தாா். விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பழஞ்சூா் செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வீரமணி, கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஒன்றியச் செயலா் ஆா்.பி. முருகானந்தம், வட்ட வழங்கல் அலுவலா் பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் துரை. இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.