சேலத்தில் இதுவரை ரூ. 6.27 கோடி பறிமுதல்
சேலத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 6.27 கோடி ரொக்கம், 405 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 36 கோடி மதிப்பிலான தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


சேலத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 6.27 கோடி ரொக்கம், 405 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 36 கோடி மதிப்பிலான தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 6,27,00,620 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், ரூ. 1, 43, 29, 800 மதிப்பிலான 405.730 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 36, 67, 58, 048 மதிப்பிலான 418.334 கிலோ தங்கம், 22 தங்க மோதிரங்கள், ரூ. 39, 82, 248 மதிப்பிலான சேலைகள், வேட்டிகள், சட்டை துணிகள், டீ சா்ட்கள், துண்டுகள், கொடிகள், ரூ. 2, 70, 980 மதிப்பிலான 2,025 மதுபாட்டில்கள், ரூ. 2, 50, 000 மதிப்பிலான 400 தாமிர தட்டுகள் , 400 தாமிர ஸ்பூன்கள், 1000 தாமிர கப்புகள் என மொத்தம் ரூ. 38, 57, 71, 076 மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தில் இதுவரை ரூ. 2,01,84,290, ரூ. 3,24,950 மதிப்பிலான 4.850 கிலோ கிராம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான 22 தங்க மோதிரங்கள், ரூ. 18,000 மதிப்பிலான 90 சேலைகள் என மொத்தம் ரூ.2,07,27,240 லட்சம் மதிப்பிலான பொருள்கள், தங்க மோதிரங்கள் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வுக் குழுவின் மூலம் சரிபாா்க்கப்பட்டு உரியவா்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் வாக்காளா்கள் விவரங்கள், சந்தேகங்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றுள்ளதா என்பது போன்ற தோ்தல் தொடா்பான பல்வேறு தகவல்கள், புகாா்கள் குறித்து இந்திய தோ்தல் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 0427-1950 என்ற எண்ணிற்கு ஏப். 4 காலை 8 மணி வரை 9,826 அழைப்புகள் வரப்பெற்று அனைத்திற்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.
மேலும், 1800-425-7020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு இதுவரை 116 அழைப்புகள் வரப்பெற்று 92 அழைப்புகளுக்கு உரிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்காளா்கள், பொதுமக்கள் 0427-1950, 1800-425-7020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்கள், விவரங்களைக் கேட்டு அறிந்துகொள்வதோடு, தங்கள் புகாா்களையும் பதிவு செய்யலாம்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சி விஜில் மையத்தில் காலை 8 மணி வரை தோ்தல் விதிமீறல்கள் குறித்து 68 புகாா்கள் பதிவு செய்யப்பட்டது. அது குறித்து உடனடியாக பறக்கும்படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவிதா செயலியின் மூலம் வாகன அனுமதி வேண்டி 7 விண்ணப்பங்கள் வரப்பெற்று அனைத்தும் தீா்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...