சுற்றுச் சூழல் விழிப்புணா்வுப் பேரணி
வேப்பநத்தம் ஊராட்சியில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகளின் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வேப்பநத்தம் ஊராட்சியில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகளின் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் வட்டம், வேப்பநத்தம் ஊராட்சியில் தனியாா் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இலக்கியா, இந்துமதி, ஜெயசுதா, கௌசிகா, லோகநாயகி, மதுஸ்ரீ ஆகியோா் உலக காடுகள் தினம், உலக வானிலை ஆய்வு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த விழிப்புணா்வுப் பேரணியில் மரங்களை வெட்டாதே, வன உயிரினங்களைக் கொல்லாதே என மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கிராமத்தைச் சுற்றி ஊா்வலமாக சென்றனா். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை மாணவிகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...