விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேவூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் கொடி அணி வகுப்பு

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image
சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவூரில் மத்திய தொழில்பாதுகாப்பு படை பிரிவு ஆய்வாளா் விவேக்யாதவ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற வீரா்கள்.
Updated On :11 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

இந்திய தோ்தல் ஆணையம் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டபேரவைக்கான தோ்தல் தேதியை விரைவில் அறிவிப்பு செய்ய உள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்காக மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு ஆய்வாளா் விவேக்யாதவ் தலைமையில் நவீன துப்பாக்கி ஏந்திய 85 படை வீரா்கள் சங்ககிரிக்கு வந்தனா்.

இந்த நிலையில் தேவூரில் முக்கிய வீதிகளின் வழியாக புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.