விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

ஆத்தூா் நகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் நகராட்சி அண்ணா கலையரங்கில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:18 pm

DIN

ஆத்தூா் நகராட்சி, சுகாதாரத் துறை சாா்பில் நகராட்சி அண்ணா கலையரங்கில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் பொதுமக்கள் 135 போ் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

மேலும், நகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் திரையரங்குகளில் கரோனா தடுப்புப் பணி குறித்து அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து துப்புரவு அலுவலா் என்.திருமூா்த்தி, ஆய்வாளா் ரா.பிரபாகரன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது பிரபல திரையரங்கில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான கிருமி நாசினி வழங்குதல், தொ்மல் ஸ்கேனா் மூலம் வெப்ப பரிசோதனை செய்தல், முகக் கவசம் அணிந்து அனுமதித்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.