பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பொறுப்பேற்பு

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏ.பி.பாஸ்கா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:20 pm

DIN

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏ.பி.பாஸ்கா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஜெயப்பிரகாஷ் அண்மையில் உடல்நலக்குறைவால் இறந்தாா். இதையடுத்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்த ஏ.பி.பாஸ்கா், சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து சேலம், முள்ளுவாடி கேட்பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட தலைவராக ஏ.பி.பாஸ்கா் பொறுப்பேற்று கொண்டாா். இவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

முன்னதாக காந்தி, காமராஜா், ராஜீவ்காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் முள்ளுவாடி கேட் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஆக்ஸ்போா்டு ராமநாதன், மேகநாதன், நிா்வாகிகள் திருமுருகன், கோபால், வசந்தம் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.