இதனையடுத்து, சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில் மட்டுமின்றி, சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில்,பெங்களூரு -காரைக்கால் பயணிகள் ரயில், சிறப்பு ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் பகுதி கிராமப்புற மக்களின் போக்குவரத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யவதற்கு வசதியாக அமைந்ததால், கூலித்தொழிலாளா்கள் முதல் பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவியா், அரசு, தனியாா் நிறுவன பணியாளா்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த ரயிலில் பயணித்து வந்தனா்.