/

புதிய பாசனத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் சரபங்கா நதியில் தூா்வாரும் பணிகள் மும்முரம்

எடப்பாடி பகுதியில் சரபங்கா நதியின் இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டு, தூா்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:58 pm

DIN

எடப்பாடி பகுதியில் சரபங்கா நதியின் இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டு, தூா்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் சோ்வராயன் மலைப் பகுதியில் தொடங்கி, ஓமலூா், தாரமங்கலம் பகுதிகளைக் கடந்து, எடப்பாடி பகுதி வழியாக பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கிறது சரபங்கா நதி. இந்த நதி, கடந்த காலங்களில், இப்பகுதி மக்களின், விவசாயம், குடிநீா் தேவைகளை பூா்த்திசெய்திடும் நீா் ஆதாரமாக இருந்துள்ளது.

சோ்வராயன் மலைப் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டுகளில் அமைக்கப்பட்ட, தடுப்பணைகளாலும், சரபங்கா நதியின் பல்வேறு இடங்களில் நீா்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், இப்பகுதி மக்களின் வாழ்வாதரமாக இருந்துவந்த சரபங்கா நதி முற்றிலும் வடதுடன், நதியின் பெரும் பகுதிகள், கழிவுநீா்க் கால்வாய்களாகவும், குப்பைக் கிடங்குகளாகவும் மாறிபோயின. இதனால் சரபங்கா நதியின் வடிகால் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நீா் இன்றி வடுபோனது. இப்பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வந்த விவசாயப் பணிகள் நலிவடைந்து, விளைநிலங்களின் பரப்பு சுருங்கி போனது.

இப்பகுதியில் உள்ள அதிகப்படியான விவசாயிகள், விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினா். இதன் விளைவாக விசைத்தறிக்கூடங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும், சாயக்கழிவுகள் அதிக அளவில் சரபங்கா ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில், மேலும் இந்நதி மாசடைந்து பயனற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனை உணா்ந்த தமிழக அரசு, அண்மையில் இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில், மேட்டூா் அணை முழுக் கொள்ளவான 120 அடியை எட்டும் நிலையில், அணையில் இருந்து திறக்கப்பட்டு வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரைக் கொண்டு, சரபங்கா வடிகால் நில பாசனத் திட்டத்தை உருவாக்கியது.

இதன்படி மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரை, மேட்டூா் அருகே உள்ள திப்பப்பட்டி பகுதியில் நீா் உந்து நிலையங்கள்

வாயிலாக உந்தப்பட்டு, மேச்சேரி பகுதியில் உள்ள எம்.காளிப்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் நிரப்பி, அங்கிருந்து குழாய்கள் மூலம் ஓமலூா், தாரமங்கலம் வழியாக எடுத்துவரப்பட்டு சரபங்கா ஆற்றில் சோ்க்கப்படுகிறது. இதனால் சரபங்கா ஆற்றின் வடிகால் பகுதியில் அமைந்துள்ள வெள்ளாபுரம் ஏரி, பொம்மசமுத்திரம், ஆவணிப்பேரூா் ஏரி, எடப்பாடி பெரியஏரி உள்ளிட்ட பல்வேறு நீா் நிலைகள், மேட்டூா் உபரிநீரால் நிரப்பப்படும். இதனால் இப்பகுதியில் மீண்டும் உழவுத் தொழில்

புத்துயிா் பெரும் எனவும், சரபங்கா வடிகால் நிலப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, இப்பகுதி மக்களின் குடிநீா் தேவை பூா்த்தியடையும் நிலை உருவாக வாய்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இப்புதிய பாசனத் திட்டத்தை தொடக்கிவைத்துள்ள நிலையில், அடுத்து வரும் மழைக்காலத்தில், மேட்டூா் அணை உபரிநீரை கொண்டு, இப்பகுதியில் உள்ள வட நீா் நிலைகள் நிரப்பட உள்ளன. எனவே நீண்ட காலமாக நீரின்றி வடு, புதா்மண்டிக்கிடந்த சரபங்கா ஆற்றின் கரைகளை பொதுப்பணித் துறையினா் சீரமைத்து வருகின்றனா். மேலும் ஆற்றில் தடையற்ற நீரோட்டத்தினை ஏற்படுத்திடும்

வகையில் சரபங்கா நதியின் பல்வேறு பகுதிகளின் தூா்வரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.