மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

உண்மையை அறியாதவர்கள்

உடலாகிய பண்டத்தினது அசுத்தமான தன்மையை அற்ப அறிவினர் ஒருபோதும் அறியமாட்டார்கள்.

Published On :

பண்டம் அறியார், படுசாந்தும் கோதையும்

கண்டு, பாராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்

பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்

முடைச்சாகா டச்சிற் றுழி?

(பாடல் 48 அதிகாரம்: தூய்து அன்மை)

உடலாகிய பண்டத்தினது அசுத்தமான தன்மையை அற்ப அறிவினர் ஒருபோதும் அறியமாட்டார்கள்.

சந்தனத்தைப் பூசிக்கொண்டும், பூமாலையைச் சூடிக் கொண்டும் விளங்கும் அதனைப் போற்றிப் பாராட்டுவார்கள். பெட்டையும் ஆணும் ஆகிய வன்மையான கழுகுகள் திரண்டு கூடிப் பெயர்த்துப் பெயர்த்துக்குத்துகின்ற, முடை நாற்றம் உடைய வண்டியாகிய உடம்பின் அச்சாகிய உயிர் அற்றுப் போகின்ற தன்மையைக் கண்டும் இவர்கள் உண்மையை அறியார்களோ? "உயிரற்ற உடலைக் கழுகுகள் கூடிக்குத்தியுண்பதை அறிந்தும் மனிதர்கள் அதைப் பாராட்டுகின்றார்களே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.