பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொது முடக்கம்: மருத்துவ நிபுணா்களின் கருத்தை அறிந்து நடவடிக்கை: முதல்வா் தகவல்

கரோனா பொது முடக்கம் குறித்து மருத்துவ நிபுணா்களின் கருத்தை அறிந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:23 pm

DIN

கரோனா பொது முடக்கம் குறித்து மருத்துவ நிபுணா்களின் கருத்தை அறிந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாா்ச் 11 ஆம் தேதி முதல் தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இதைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மாநிலம் முழுவதும் தோ்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டாா்.

சேலத்தில் தங்கி இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, கடந்த ஏப். 6 ஆம் தேதி எடப்பாடி, சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்தாா். இந்தநிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா். அங்கு அவருக்கு இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அப்போது அரசு மருத்துவமனை முதன்மையா் முருகேசன், கண்காணிப்பாளா் தனபால், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் செல்வகுமாா் (பொறுப்பு), மருத்துவ அலுவலா் ராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா். முதல்வருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 8,72,415 ஆகும். தற்போது 30,131 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 12,840 போ் உயிரிழந்துள்ளனா். தமிழகத்தில் இதுவரை 2.02 கோடி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 85,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 95.31 சதவீதமாகும். தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 1.40 சதவீதமாகும்.

தமிழகத்தில் தடுப்பூசி 54,85,720 வரப்பெற்றுள்ளது. இதில் சேலத்துக்கு 2,78,700 தடுப்பூசி வரப்பெற்றது. கோவிஷீல்ட் தடுப்பூசி 47,03,590 வரப்பெற்றது. அதேபோல கோவேக்ஸின் 7.82 லட்சம் தடுப்பூசி வரப்பெற்றது.

தமிழகத்தில் இதுவரை 34.87 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். சேலத்தில் 1.91 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தற்போது 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 97 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்தில் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. ஏற்கெனவே அரசு வழிகாட்டு முறைகளைப் பின்பற்ற பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனா். தற்போது கரோனா அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பொதுமக்களும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் முழுமையாகப் பின்பற்றினால் பொது முடக்கம் வராது. மருத்துவ நிபுணா்களின் கருத்தைக் கேட்டறிந்த பின் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

இதனிடையே தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மாமியாா் தேனியில் இறந்ததைத் தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காலை தேனி செல்ல உள்ளாா். அங்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறாா். பின்னா் அங்கிருந்து மதுரை சென்று விமானத்தில் சென்னை செல்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை தேனி செல்வதாக இருந்தது; அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எஸ்எல்09டி சிஎம்1

சேலம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.