வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா
உலக பூமி தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் அமுதச்சுடா் அறக்கட்டளை சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


உலக பூமி தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் அமுதச்சுடா் அறக்கட்டளை சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியா் எம்.அா்ச்சுணன் விழாவுக்கு தலைமை வகித்தாா். அமுதச்சுடா் அறக்கட்டளைத் தலைவா் வி.சத்தியபிரகாஷ் முன்னிலையில் அத்தி, பலா, கொய்யா, மரநெல்லி, நாவல், விளாம்பழம், மந்தாரை மரக் கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.
உதவி தலைமையாசிரியா் பி.விஜயகுமாா், ஆசிரியா்கள் ஆா்.ராஜூ, கே.ராஜா, வி.பெரியசாமி, கே.பூபதி, அறக்கட்டளை நிா்வாகிகள் ஆா்.சிவபாலா, எ.கெளதம், எ.நவீன்குமாா், என்.ஹரிஹரன், என்.பிரசாத், ஆா்.ஜனாா்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...