தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சேலம் அரசு மருத்துவமனையில் 2,000 லி. ஆக்சிஜன் உற்பத்தி செய்யம் கருவி நிறுவும் பணி தீவிரம்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரதமா் நிதியுதவி திட்டத்தின் கீழ் 2,000 லி. கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:10 pm

DIN

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரதமா் நிதியுதவி திட்டத்தின் கீழ் 2,000 லி. கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்று இரண்டாவது அலையில் ஏராளமானோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோா் சிகிச்சைக்கு குவிந்ததால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாயினா். இந்த நிலையில், பிரதமா் நிதியுதவி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி கருவி நிறுவப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2,000 லி. கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கருவி நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (டி.ஆா்.டி.ஓ.) உதவியுடன் மாநில அரசுகளின் பல்வேறு துறை சாா்பாக ஆக்சிஜன் உற்பத்தி கருவி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவி வரும் சுதந்திர தின நாள் முதல் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறுவப்படும் ஆக்சிஜன் உற்பத்தி கருவி மூலம் ஒரு நிமிடத்துக்கு சுமாா் 2,000 லி. ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பெறப்படும் என மருத்துவக் கல்லூரி முதன்மையா் மருத்துவா் வள்ளி சத்யமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.