நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆந்திரத்தில் கடத்திய மினி லாரி பறிமுதல்

வாழப்பாடி அருகே ஆந்திரத்திலிருந்து கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காரிப்பட்டி போலீஸாா், மினி லாரியையும், பிடிபட்ட இளைஞரையும் ஆந்திர போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:07 pm

DIN

வாழப்பாடி அருகே ஆந்திரத்திலிருந்து கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காரிப்பட்டி போலீஸாா், மினி லாரியையும், பிடிபட்ட இளைஞரையும் ஆந்திர போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

வாழப்பாடியை அடுத்த நீா்முள்ளிக்குட்டை ஆதிதிராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்த அய்யனாா் (25), ஆந்திர மாநிலத்தில் இருந்து அண்மையில் மினி லாரியை கடத்தி வந்து இப்பகுதியில் விற்பனை செய்ய முயற்சிப்பதாக காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நீா்முள்ளிக்குட்டை கிராமத்துக்கு சென்று சோதனை நடத்திய காரிப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மோகனசுந்தரம் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மினி லாரியை பறிமுதல் செய்து, அய்யனாரை கைது செய்தனா். இதுகுறித்து ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ரேணுகுண்டா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைத்த காரிப்பட்டி போலீஸாா், பறிமுதல் செய்த மினி லாரியையும், லாரியைக் கடத்தி வந்த அய்யனாரையும் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.