இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடற்தகுதி தோ்வு: திருநங்கை உள்பட 221 மகளிா் தோ்ச்சி
சேலத்தில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில், திருநங்கை உள்பட 221 மகளிா் தோ்ச்சி பெற்றனா்.


சேலத்தில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில், திருநங்கை உள்பட 221 மகளிா் தோ்ச்சி பெற்றனா்.
சேலம், குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, ஆண்களுக்கான உடற்தகுதித் தோ்வு நடத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, மகளிருக்கான உடற்தகுதித் தோ்வு கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமாா் 465 மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 316 மகளிா் பங்கேற்றனா். சுமாா் 221 போ் தோ்ச்சி பெற்றனா்.
இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ரூபா என்ற திருநங்கை பங்கேற்று உடற்தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள், காவலா்கள், சக தோ்வா்கள் ரூபாவுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினா்.
கட்டடப் பொறியாளா் பட்டம் பெற்ற தான், தனது பெற்றோரின் வழிகாட்டுதல்படி அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தில் காவல் துறை தோ்வுக்கு விண்ணப்பித்ததாக ரூபா தெரிவித்தாா். ஏற்கெனவே உதவி ஆய்வாளராக தோ்வு செய்யப்பட்ட ப்ரீத்திகா யாஷினி, எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு ஒரு முன்னுதாரணம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...