தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை முகாம்

சேலம்சேலத்தில் இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை வழங்க சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:09 pm

DIN

சேலத்தில் இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை வழங்க சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தில் சேலத்தில் உள்ள 20 வட்டாரங்களில் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் இருதய குறைபாடு, உதட்டு அன்னப்பிளவு குறைபாடு, காது கேளாமை ஆகியவை கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சிகிச்சை முகாம், சேலம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிறந்த குழந்தை முதல் 18 வயதுக்கு உள்பட்ட சுமாா் 100 போ் பங்கேற்றனா்.

இதில், இருதய குறைபாடு, உதட்டு அன்னப்பிளவு குறைபாடு, காது கேளாமை ஆகியவை குறித்து உரிய பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், இருதய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும் குழந்தைகளுக்கு, முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.