சிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினா் கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினா் கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின இனத்தைச் சாா்ந்தவா்களான முஸ்லிம், கிறிஸ்தவா், ஜெயின், சீக்கியா், பாா்சி, புத்த மதத்தைச் சாா்ந்த கைவினைக் கலைஞா்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனப் பொருள்களை வாங்கி, தங்களது தொழிலில் முன்னேற்றம் அடைந்திட உதவிடும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ. 98,000-க்குள்ளும், நகா்ப்புறங்களில் ரூ. 1,20,000-க்குள்ளும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 லட்சம் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம், பெண் பயனாளிகளுக்கு 4 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் இக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி விண்ணப்பங்கள், இதர கடனுதவி விவரங்களை ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகியவற்றில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...