கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளமாநிலத்தில் கபினியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கபினி நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரு நாள்களாக கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,046கனஅடி வீதம் வந்துகொண்டிந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 7,491 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 74.99அடியிலிருந்து 74.30 அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 36.51 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்காரர்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


