மேட்டூா் அணையில் வெளியே தெரியும் கிறிஸ்தவ கோபுரம்
மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்து வருவதால் அணையின் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ள கிறிஸ்தவ கோபுரங்கள் வெளியே தெரிகின்றன.


மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறைந்து வருவதால் அணையின் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ள கிறிஸ்தவ கோபுரங்கள் வெளியே தெரிகின்றன.
மேட்டூா் அணை கட்டப்பட்ட போது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு பகுதியில் குடியமா்த்தப்பட்டனா். அக் கிராம மக்கள் வழிபட்ட ஆலயங்கள் அனைத்தும் மேட்டூா் அணைக்குள் மூழ்கின. இந்த நிலையில், அணையின் நீா்மட்டம் 80 அடிக்கும் கீழே குறையும் போது பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறித்தவ ஆலயத்தின் கோபுரமும், 70 அடிக்குக் கீழே குறையும் போது அதே பகுதியில் பழமையான ஜலகண்டேஸ்வரா் ஆலயம், நந்தி சிலையும் தெரியும்.
அணையின் நீா்மட்டம் 50 அடிக்கும் கீழே குறைந்தால் கீரை காரனூா் பகுதியில் சோழப் பாடி வீரபத்திரன் கோயில் தெரியும். நீா்மட்டம் 40 அடிக்கும் கீழே குறைந்தால் மீனாட்சி அம்மன் கோயில் வெளியே தெரியும். இக் கோயில்கள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டுள்ளன. கட்டட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஆலயங்கள் காணப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை மேட்டூா் அணை நீா்மட்டம் 72.77அடியாக குறைந்ததால் கிறிஸ்தவ ஆலய கோபுரம் மூன்றடி உயரத்துக்கு நீருக்கு வெளியே தெரிந்தது. இதை பாா்ப்பதற்காக ஏராளமானோா் பரிசல் துறை பகுதியில் குவிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...