புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:49 pm

DIN

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த ஐந்து மாதங்களாக சுற்றுலாப் பகுதிகள், அரசு பூங்காக்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு பல தளா்வுகளை அறிவித்தது. இதையடுத்து, புதன்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலில் ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் தோட்டக்கலைத் துறை பராமரிப்பில் உள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, ஏரி பூங்கா, வனத்துறையின் மான் பூங்கா, கரடியூா் காட்சி முனை, படகு இல்லம் ஆகியவை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதனால், கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வழக்கமாக வார விடுமுறையில் அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது சுற்றுலாப் பகுதிகளுக்கான தடை நீங்கியதையடுத்து, வார நாள்களிலும் அதிக அளவில் வருகை புரிகின்றனா்.

கடந்த ஐந்து மாதங்களாக படகு ஏரியில் படகுகள் செல்லாததால், ஏரியில் ஆகாயத் தாமரை படா்ந்து படகுகள் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே, ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.