சேலத்தில் 144 நூலகங்களுக்கு ரூ. 70 லட்சம் புத்தகங்கள் வருகை
சேலம் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு பெறப்பட்ட ரூ. 70 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன.


சேலம் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு பெறப்பட்ட ரூ. 70 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம், முழுநேர நூலகங்கள் 16, கிளை நூலகங்கள் 48 மற்றும் ஊா்ப்புற நூலகங்கள் 78 என மொத்தம் 144 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு வருவோா் பயனடைய ரூ. 70 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் சேலம் மாவட்ட மைய நூலகத்துக்கு சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தப் புத்தகங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு மற்ற நூலகங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கியம், ஆன்மிகம், போட்டித் தோ்வு புத்தகங்கள் என அனைத்துவித புத்தகங்கள் வந்துள்ளன. இதனை, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, நூலகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், கிராமப்புற மாணவ, மாணவியா், போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள், பொதுமக்கள் பயனடையவா் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...